கோவை, நவ.14-
வாகராயம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவை கலைக்க வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வேளாண்மை சங்க தலைவராக சி.மணி மற்றும் நிர்வாக்க் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்க விதிகளுக்கு புறம்பாக தங்களது உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு கடன் வழங்கி உள்ளனர். இதனால் கூட்டுறவு சங்கத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெறவோ, பண வைப்புத் தொகை செலுத்தவோ, தற்போது தயங்கி வருகின்றனர். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருமத்தம்பட்டி பேரூராட்சி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: