கோவை, நவ. 14
வனத்துறையின் சிகிச்சை பலனளிக்காமல் காலில் அடிபட்டிருந்த காட்டு யானை செவ்வாயன்று பரிதாபமாக உயிரிழந்தது.

கோவையை அடுத்துள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 25 வயது மதிக்க தக்க ஆண் யானை காலில் காயத்துடன் சுற்றிதிரிந்தது இதனையடுத்துவனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள்கும்கி யானை உதவியுடன் காயம் அடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கமுடிவெடுத்தனர். இதனைத்தொடர்ந்து வன கால்நடைமருத்துவ அலுவலர்கள் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தினர். இதனால் யானை நடக்க முடியாமல் நின்றது. இதனை பயன்படுத்தி கொண்ட கால்நடை மருத்துவ அலுவலர்கள் வலி நிவாரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினர்.

மேலும், முன்னங்காலில் இருந்த கட்டியை கிழித்து அறுவை சிகிச்சை செய்து காயத்துக்கு மருந்து போட்டனர். இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட யானை செவ்வாயன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனைத்தொடர்ந்து கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் சதீஷ், உதவி வன பாதுகாவலர் நசீர் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இறந்த யானையின் உடல் வனத்திற்குள்ளேயே புதைக்கப்படும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: