அருமனை;
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மேல்புறத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலக்குளம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கினார். அருமனை கூட்டுறவு சங்கத் தலைவர் பி. நடராஜன் வரவேற்றார். சிஐடியு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கை துவக்கிவைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கேவிபிசிஎம்எஸ் தலைவருமான ஆர்.லீமாறோஸ் உள்ளிட்டோர் பேசினர்.

குமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டிக்கு தலைவராக செல்லப்பன், செயலாளராக செல்லசுவாமி, பொருளாளராக சவுந்தர், நிர்வாகிகளாக ஆர். லீமாறோஸ், மாதவன் உட்பட 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளுக்கு முன்பு கொடுத்துள்ளது போல் கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் காலியிடங்களை நிரப்ப சங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சி தலையீட்டுடன் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறது. முறை கேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: