தூத்துக்குடி;
தூத்துக்குடியில் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.தூத்துக்குடி, திரேஸ்புரம் முத்தரையர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் கோவிந்தராஜ் (27) கடல் தொழிலாளி. நேற்று நாட்டுப் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். நடுக்கடலில் திடீரென அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக மீனவர்கள் கரை திரும்பினர். பின்னர், அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply