தூத்துக்குடி;                                                                                                                                                                                ஒரே நாளில் 1.61 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.இது தொடர்பாக வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 11.11.2017 அன்று 1,65,189 மெட்ரிக் டன் சரக்குகளை ஒரே நாளில் கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையான 15.04.2017 அன்று ஒரே நாளில் கையாண்ட அளவான 1,61,935 மெட்ரிக் டன் அளவை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளது. இந்த சாதனை நிகழ்வதற்கு முக்கியமாக அதிக அளவில் தொழிலகக்கரி, அனல்மின் கரி, உரம், உரமூலப்பொருட்கள் மற்றும் இதர சரக்குகள் கையாளப்பட்டதால் இந்த சாதனை படைக்க முடிந்தது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஜெயகுமார், இந்த சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுக துறை தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்வதுடன், இனி வரும் காலங்களில் இது போன்று பல சாதனைகளை தொடர்ந்து புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave A Reply