சமீபத்தில் அறம் பட இயக்குனர்  கோபி நயினார் அவரை பற்றியும் காலா பட இயக்குனர் ரஞ்சித் பற்றி சமுகவைத்தலங்களில் இருவருக்கு கருத்துவேறுபாடு, பட உரிமை பிரச்சனையை என இல்லாத பிரச்சனைகளை சிலர் திரித்து பொய்களை பரப்பிவருகின்றனர் வருகின்றனர். இதுபோன்ற செயலுக்கு முடிவு காட்டும்வகையில்   அவரது உதவி இயக்குனர் அசோக் என்பவர் இயக்குனரிடம் விளக்கம் கேட்டறிந்து அவரது   முகநூலில் பக்கத்தில் இது தொடர்பான செய்தி ஒன்றை  பதிவேற்றம் செய்துள்ளார்.

இயக்குனர் கோபி நயினார் பதிவு:

இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல.
தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும்  ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமைய கூடும். ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான்  அனுமதிக்க மாட்டேன்.

நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தததை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தை  தெரிவித்து கொள்கிறேன்.

தோழமையுடன் கோபி நயினார்.

Leave A Reply