உத்திரமேரூர்அருகில் உள்ள  களியாம்பூண்டி ஏரி பகுதியில் மழைநீர் நிரம்பி வருவதையடுத்து அங்கு பல்வேறு வகை பறவைகள் இரைத்தேடி வருகின்றன. இவ்வாறு இரைதேடி வரும் அரிய வகை பறவைகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் வனத்துறை அலுவலர்கள் களியாம்பூண்டி ஏரிப் பகுதியில் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தினர். அப்போது நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் ஏரி வழியே சுற்றி திரிவதை கண்ட வனத்துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் அரிய வகையான காட்டுப் பூனை, வவ்வால்கள் மற்றும் பறவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் வனத்துறையினர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நரிகுறவர் காலனியை சேர்ந்த சிவகுமார் 42 என்பதும்,விலங்கு மற்றும் பறவைகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் வேட்டையாடிய அரியவகை காட்டுப்பூனை, வவ்வால்கள், பறவைகள் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகுமார் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ, 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: