பாக்தாத்,

ஈரான் இராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450ஐ தாண்டி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் – இராக் ஆகிய நாடுகளின் எல்லையோரத்தில் திங்கட்கிழமைன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது குர்திஸ்தான் மாகாணத்தின் சுலைமானியா பகுதியில் பெஞ்வின் எனுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450 ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில் .6600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து 100 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதனால் ஹெர்மான்ஷா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி இரவு முழுவதும் தெருக்களில் தங்கியிருந்தனர்.
இராக்கிற்கு துருக்கி உதவி
துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவிக்கையில் மருத்துவ மற்றும் உணவுப்பொருள்களை இராக்குக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளோம் என்றார், ஈரான் கோரிக்கை விடுத்தால் உதவிப்பொருட்களை அனுப்பி வைப்போம் என்று துருக்கி அறிவித்துள்ளது.
ஈரானில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 26,000 பேர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக இந்த பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: