இராமநாதபுரம்,
மீனவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்று வற்புறுத்தி இந்திய கடலோர காவல் படையினர் தாக்குதல் நடத்தயதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்தோணிராஜ் என்ற மீனவர் சக மீனவர்களுடன் தனது படகில் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் திடீர் என மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகிய மீனவர்கள் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் தமிழில் பேசக்கூடாது என்று கூறி இந்தியில் பேச வற்புறுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை

வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது வழக்கம் போல் ஜகோவா ஜெர்ரி கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. வங்கக்கடலில் மீன்பிடித்து வந்த படகுகளை நிறுத்தக்கோரியும் அவர்கள் நிறுத்த வில்லை. தொடர்ந்து 50 நிமிடம் விரட்டிச் சென்ற பிறகே படகு நிறுத்தப்பட்டது. படகில்  தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதால் இரட்டை மடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை திசைதிருப்பவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வில்லை இந்திய  ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரப்பர் குண்டுகள் கூட பயன்படுத்தப்பட வில்லை என்று ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave A Reply