ஈரோடு, நவ. 14-
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதாந்திர கூட்டங்களில் ஆட்சியர் வருவதில்லை. இதனால் ஆட்சியர் எங்கே என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் வருகின்றனர். அப்போது ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடடு தீர்வு காண வேண்டும் என கோரிக்கையை முன் வைக்கின்றனர். ஆனால் எப்போதும் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மட்டுமே முழுமையாக இருக்கிறார். பெரும்பகுதி குறைதீர்க்கும் முகாம்களில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பதில்லை என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து திங்களன்று மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் கூறியதாவது :-பல முறை பல அதிகாரிகளுக்கு எங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தும் தீர்வு கிடைக்காத வகையில் இறுதியாக ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வருகிறோம். ஆனால், ஆட்சியரோ, கடந்த 2 மாதங்களாக வருவதே இல்லை. அப்படியே வந்தாலும், கூட்டத்தில் இறுதியில் வந்து தலையை மட்டும் காட்டி செல்கிறார். இது பொதுமக்களின் மீது அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது. இனியாவது வரும் நாட்களில் குறைதீர்க்கும் நாட்களில் ஆட்சியர் முழுமையாக இருந்து எங்களின் குறைகளை கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: