திருத்தணி நகராட்சியில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த  புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தணி வட்ட 10 வது மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.

திருத்தணியில் தோழர் எம்.ஏ.பழனி நினைவரங்கத்தில் திங்களன்று (நவ 13) நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ். சம்மந்தம், ஆர்.பொற்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டக் குழு உறுப்பினர் வி.பாலாஜி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்டக் குழு உறுப்பினர் வி.அந்தோணி வரவேற்றார். மூத்த தோழர் கே.ஆறுமுத்து கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஏ.மோகனா துவக்கிவைத்துப் பேசினார்.வட்டச் செயலாளர் ஏ.அப்சல்அகமது அறிக்கையை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் மாநாட்டை முடித்து வைத்துப்பேசினார். வட்டக் குழு உறுப்பினர் எஸ். தீன் நன்றி கூறினார்.9 பேர் கொண்ட வட்டக் குழுவின் செயலாளராக ஏ.அப்சல்அகமது தேர்வு செய்யப்பட்டார்.

திருத்தணி, பூனிமாங்காடு, பீரகுப்பம், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் திருத்தணியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்,திருத்தணி அரசு கலைக்கல்லூரிக்குச் செல்ல பெண்களுக்கு என தனியாக பேருந்து இயக்க வேண்டும், செருக்கனூர், மேதினிபுரம், டி.புதூரில் அருந்ததியர் மக்கள் வாழும் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: