திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள  சேவாலயா சேவை மையமானது ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தின விழாவை மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடுவது வழக்கம்.

அதே போல் இவ்வாண்டும் இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது.

இதில் சேவாலயா குழந்தைகள் பங்கு கொண்டு அவர்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பழங்கள், ரொட்டி, பிஸ்கட்ஸ் வழங்கினர்.
விழாவில் மாவட்ட அரசு பொது மருத்துவர் டாக்டர் . பிரபு சங்கர் அவர்கள் பேசுகையில் கடந்த பத்து ஆண்டுகளாக இது போன்று ஒவ்வொரு ஆண்டும் சேவாலயா குழந்தைகள் எங்கள் மருத்துவமனைக் குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இதற்காக நாங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். டாக்டர் ஜெகதீசன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

மற்றொரு பகுதியாக  சேவாலயா சேவை மையத்தில் 2000 குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஆ மு ஞானசேகரன் கலந்து கொண்டார்.   முன்னதாக சேவாலயா அறங்காவலர் அன்னபூர்ணா, ஆலோசகர்  ஏ மணி  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சேவாலயா

Leave A Reply