ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரியது தொடர்பாக பேரவைத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 11 பேரை தகுநீக்கம் செய்யக்கோரி  பார்த்திபன், தங்கதமிசெல்வன், ரங்கசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

திங்களன்று (நவ. 13) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,  நீதிபதி சுந்தர் அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி பேரவைத் தலைவர், அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சட்டப்பேரவை தொடர்பான வழக்குடன் விசாரிக்க வரும் 16ஆம் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டது.

Leave A Reply