கொச்சி;
விமானத்தை கடத்திக் கொண்டு செல்வதாக செல்போன் வீடியோ பதிவு மூலம் தெரிவித்த பயணி கைது செய்யப்பட்டார்.மும்பையில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கிளின்ஸ் வர்க்கீஸ் (26).இன்று மதியம் 12.05 மணிக்கு கொச்சியிலிருந்து மும்பைக்கு செல்ல ஜெட் ஏர்வேஸ்  விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.

பயணிகளை சோதனை செய்து விமானத்தில் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் அருகில் நின்றுகொண்டு  செல்போனில் படம் பிடித்தார். விமானத்தை கடத்திச்செல்ல உள்ளதாகவும் வீடியோவாக பதிவு செய்து விமானத்துக்குள் இருந்த தனது நண்பருக்கு தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த பாதுகாப்பு ஊழியர்கள் கிளின்சை பிடித்து நெடும்பாச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கினார்கள்.

விமானம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு பகல் 1.45க்கு விமானம் மும்பை புறப்பட்டது.விளையாட்டாக இதைச் செய்ததாக கூறிய கிளின்ஸ், தனது தந்தை சுங்கத்துறை அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: