வங்கி ஊழியர் அடித்து விவசாயி மரணமடைந்தது தொடர்பாக ரிசர்வ் வங்கி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் டிராக்டர் வாங்க பெற்ற கடனை திரும்ப செலுத்தாத ஞானசேகரன் என்ற விவசாயி வங்கியின் கடன் வசூலிக்கும் ஊழியர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபோன்று கடன்களை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகள் துன்புறுத்தப்படுவதையும் தற்கொலை செய்து கொள்வதையும் தடுக்கும் வகையில்  கடன்களை வசூலிக்க புதிய விதிகள் அமைக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை திங்களன்று (நவ. 13) விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு,  இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கும், மத்திய – மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: