ராஜஸ்தானில் மீண்டும் பசுக் குண்டர்கள் கிளம்பி விட்டார்கள். உம்மர் கான் எனும் மாட்டு வியாபாரியை அவர்கள் சுட்டுக் கொன்று விட்டார்கள். அவரின் சகா டாகிர் கானும் சுடப்பட்டு படுகாயம் பட்டுள்ளார். மாட்டை வைத்து மதவெறி ஆட்டம் போடும் சங் பரிவாரிகளின் சதித் திட்டம் தொடர்கிறது. சரித்திரத்தை அதற்காக திரிக்கும் வேலையும் தொடர்கிறது.சஞ்சய் லீலா பன்சாலியின் “பத்மாவதி” படத்தை தடை செய்ய வேண்டும், இல்லையெனில் சித்தூர் கோட்டைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பரிவாரிகள் கொக்கரித்திருக்கிறார்கள். கலைஉரிமை இவர்களது ஆட்சியில் தொடர்ந்து கிழிபடுகிறது.
சந்தடி சாக்கில் கந்தப் பொடி விற்கிற கதையாய் பள்ளிகளில் எல்லாம் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி. இந்த திணிப்பு மட்டுமல்ல, சமஸ்கிருத திணிப்பும் இவர்களது நோக்கம் என்பது உறுதியாகிறது. இந்த மூன்று செய்திகளும் இன்றைய டிஒஐ ஏட்டில் வந்துள்ளன. ஒரு மாநிலத்தில் பாஜக வேரூன்றிவிட்டால் அதன் சமூக, ஜனநாயக வாழ்வு எப்படி கேடுகெட்டுப் போகும் என்பதை
தமிழகமே உணர்ந்திடு.

Ramalingam Kathiresan

Leave A Reply