திரு.கோடு, நவ.13-
மேட்டுர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை செத்தமலை வழியாக திருமணி முத்தாற்றில் திறந்து விட வேண்டும் என சிபிஎம் எலச்சிப்பாளையம்-மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிப்பாளையம்-மல்லசமுத்திரம் ஒன்றிய மாநாடு சின்ன எலச்சிப்பாளையம் சமுதாய கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் பி.செங்கோடன் கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வேலுசாமி வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயலாளர் ஏ.ரங்கசாமி சிறப்புரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.

தீர்மானம்:
இம்மாநாட்டில், மேட்டுர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திறந்து விட வேண்டும். எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும்.வையப்பமலையை மையப்படுத்தி காவல் நிலையம் அமைக்க வேண்டும்.அழிந்து வரும்விசைத்தறி தொழிலை பாதுக்காக்க அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். எலச்சிப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம்உயர்த்த வேண்டும். காலியாக உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
முன்னதாக, இம்மாநாட்டில் ஒன்றிய செயலாளராக சு.சுரேஷ் மற்றும் 12 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் நிறைவுரை ஆற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: