ஏற்காடு, நவ.13-
மலைகளில் உள்ள குடியிருப்பு நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என சிபிஎம் ஏற்காடு ஒன்றிய மாநாட்டில் தீர்ர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்காடு ஒன்றிய 7 ஆவது மாநாடு ஏற்காடு டவுன் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியினை சின்னம்மா ஏற்றிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குழந்தைவேலு துவக்கவுரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் பழனிசாமி முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. தீர்மானங்கள் இம்மாநாட்டில், மலைகளில் உள்ள நிலங்களுக்கு பட்டா கொடுப்பதற்கு தடையாக உள்ள அரசாணை 1861ஐ ரத்து செய்ய வேண்டும்.

ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி, கழிவு நீர் ஏரியில் கலக்காமல் வேறு இடத்திற்கு திருப்பிவிட வேண்டும். வேலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட செங்கொடி நகருக்கு பட்டா, மின் வசதி, குடிநீர் வசதி செய்துதர வேண்டும். ஏற்காட்டிலிருந்து கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்து செல்வதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய ஒன்றிய செயலாளராக நேரு மற்றும் 7 பேர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் சேதுமாதவன் நிறைவுரை ஆற்றினார். முன்னதாக, இம்மாநாட்டையொட்டி ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து பேரணி துவங்கி மாநாட்டு அரங்கை நிறைவடைந்தது.

Leave A Reply

%d bloggers like this: