தீக்கதிர்

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

மணிப்பூர், சந்தல் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 15ம் தேதியும் இதுபோன்ற குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். 4 வீரர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பித்தக்கது.