வடசென்னையின் மையமான பெரம்பூர் பேருந்துநிலையத்திலிருந்து ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த 29பி, 38சி,37பி மற்றும் 7பி வழித்தடபேரூந்துகளை மக்கள் நலன்கருதி மீண்டும் இயக்கவேண்டும் என ஞாயிறன்று (நவ. 12) நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதி  மாநாடு வலியுறுத்தியுள்ளது.

வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  கட்சியின் மூத்த உறுப்பினர் வி.முருகையன் கொடி ஏற்றி வைத்தார். எஸ்.பூங்குழலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஜி.மூர்த்தி வரவேற்றார்.பகுதிசெயலாளர் எம்.ராமகிருஷ்ணன் வேலைஅறிக்கையையும் கே.எஸ்.கார்த்தி நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் க.உதயகுமார், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ஜெயராமன், எஸ்.கே.மகேந்திரன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். டி.புவனேஷ்வரி நன்றி கூறினார்.

9 பேர் கொண்ட பகுதிக்குழுவிற்கு வி.செல்வராஜ் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
எஸ்.வி.எம் நகர் குடிசைமாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடித்து புதியதாக கட்டித்தரவேண்டும், பெரம்பூர்  பேருந்து நிலையத்திலிருந்து அயன்புரம், ரயில்வே மருத்துவமனை, ஜாயின்ட்ஆபீஸ், கேரேஜ் , லொக்கோ பணிமனை, வில்லிவாக்கம் வழியாக ஐசிஎப் பேருந்து நிலையம் வரை சிற்றுந்து வசதி செய்து தரவேண்டும், திருவிகநகர் முழுவதும்  மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரிப் புதுப்பிக்கவேண்டும், டோபிகானா பகுதியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்கவேண்டும், மழையில் பாதிக்கப்பட்ட நெல்வயல்சாலையை செப்பனிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Leave A Reply

%d bloggers like this: