மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி குழுவின் 22 வது மாநாடு நவ. 12 அன்று பொன்னேரியில் தோழர் இ.சுந்தரேசன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

பகுதி குழு உறுப்பினர்கள் ஏ.ஜி.செல்வராஜ், பி.சுப்புலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.மூத்த தோழர் ஆர்.நாகரத்தினம் கொடியேற்றினார். பகுதிக் குழு உறுப்பினர் எம். நாகராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பகுதி குழு உறுப்பினர் எஸ். இ.சேகர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் துவக்கி வைத்துப்பேசினார்.பகுதி செயலாளர் இ.தவமணி வேலை அறிக்கையை முன்மொழிந்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.நடேசன் மாநாட்டை முடிந்து வைத்துப் பேசினார்.பகுதி குழு உறுப்பினர் ஜ.கே.விஜய் நன்றி கூறினார். 9 பேர் கொண்ட பகுதி குழவின் செயலாளராக இ.தவமணி தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னேரி எல்என்ஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் பணியாற்றும் உதவி பேராசிரியர் மாரப்பன் சாதி வெறியைத் தூண்டும் மனோபாவத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவர்மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பொன்னேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், அருந்ததியர் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: