பாடி திருவள்ளூர் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று ஞாயிறன்று (நவ. 12) நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் பகுதி 13ஆவது மாநாடு வலியுறுத்தி உள்ளது.

பகுதிக்குழு உறுப்பினர் சு.பால்சாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மூத்த தோழர் கே.எம்.மன்னார் கொடியேற்றினார். என்.கணேசன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். இ.பாக்கியம் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.

சு.லெனின் சுந்தர் செயலாளர் அறிக்கையையும், சேட்டு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் பி.என்.உண்ணி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜ் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார்.

பாடி திருவள்ளூர் நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையை உருவாக்க வேண்டும், அம்பத்தூர், கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், அனைத்து வார்டுகளிலும் பூங்கா, விளையாட்டுத் திடல் நூலகம் அமைக்க வேண்டும், துப்புரவு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
12 பேர் கொண்ட பகுதி குழுவின் செயலாளராக சு.பால்சாமி  தேர்வு செய்யப்பட்டார்.

  • பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்றுக ஆவடி  மாநாடு கோரிக்கை

    பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஞாயிறன்று (நவ. 12) நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி பகுதி 13ஆவது மாநாடு வலியுறுத்தி உள்ளது.

பகுதிக்குழு உறுப்பினர் லதா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மூத்த தோழர் பிரைட்சிங் கொடியேற்றினார். நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஏ.ஜான் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சந்திரசேகரன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.
ஆர்.ராஜன் செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார்.

அன்னை சதியா நகர், பெரியார் நகர், அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், திருமுல்லைவாயில், அண்ணணூர், பட்டாபிராம் ரயில்வே பாலங்களை விரைந்து முடிக்க வேண்டும், திருமுல்லைவாயில் அராபாத் ஏரியில் கொட்டப்படும் கழிவு நீரைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவடி அயப்பாக்க்கம் சாலையை சீர்படுத்த வேண்டும், ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
9 பேர் கொண்ட பகுதி குழுவின் செயலாளராக ஆர்.ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: