வல்லம் ஊராட்சி அம்மனம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் கிராமச் சாலை மிகவும் பழுடைந்துள்ளதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிரம் மாவட்டம் செங்கல்பட்டையடுத்த வல்லம் ஊராட்சிக்குட்பட்ட அம்மனம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவம் பள்ளி,கல்லூரி உள்ளிட்ட பயன்பாட்டிற்கு செங்கல்பட்டு நகரத்திற்குச் சென்று வர கொளவாய் ஏரிக்ரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சாலை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நாள்தோறும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இச்சாலையில் உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளதால் இரவு நேரங்களில் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் விஷ ஜந்துகளுக்கு பயந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து வல்லம் ஊராட்சியில் நடைபெறும்  கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கவேண்டும், தெருவிளக்குகளைப் பழுதுபார்க்கவேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரவி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளருக்கும் மனு அனுப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: