ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகளை வாங்கியதற்காக விவசாயி உள்ளிட்ட மூவரை தாக்கிய பசு குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமை குழு ராஜஸ்தான் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் அரசியல் தலைமை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் மாடுகளை வாங்கியதற்காக விவசாயி உமர் கான் , தாகிர் கான் மற்றும் ஜாவத் கான் ஆகியோர் மீது பசு குண்டர்கள் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விவசாயி உமர் கார் உயிரிழந்தார். மேலும் ஜாவத் கானை காணவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் பசு குண்டர்களுக்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது ராஜஸ்தான் மாநில காவலர்கள் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை சம்பவங்களை ஏற்க முடியாது என கூறி , இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாவட்டம் தோறும் அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, உமர் கான் உள்ளிட்ட மூவரை தாக்கிய பசு குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ராஜஸ்தான் அரசை கேட்டுக்கொள்கிறது.

மேலும் பசு குண்டர்கள் மற்றும் அவர்களது கொள்கைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது என தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: