ஈரோடு, நவ.13-
நிலம் வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த வின் ஸ்டார் இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுதரக்கோரி பாதிக்கப்பட்டோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெருந்துறை தாலுகா துடுப்பதி கிராமம் பாலக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் கோடிஸ்வரன் நகர் என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை செய்தது. இங்கு வீட்டுமனை பெற ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 600 செலுத்தினோம். இதற்காக பணத்தை பெற்றுக் கொண்ட நிறுவன மேலாளர் இளங்கோவன், பத்திர காகிதத்தில் நிறுவனத்தின் முகவரியில் பணம் பெற்றதிற்கான ரசீதுடன், கிரையம் செய்து தருவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு இடத்தை கிரையம் செய்துதரவில்லை. இதுகுறித்து பலமுறை அவர்களிடம் முறையிட்டும் சரியான பதிலளிக்க மறுக்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளளோம். ஆகவே, குறிப்பிட்ட அந்த இடத்தை கிரையம் செய்து கொடுத்தோ அல்லது கட்டிய பணத்தை திரும்ப வழங்கவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: