ஈரோடு, நவ.13-
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை திரும்ப வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட முதியோர்கள் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் குன்றி, மாக்கம்பாளையம், திங்களூர் ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள் (ஒஎபி) உதவித்தொகை பெற்று வந்தனர். ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக 200க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி உதவித்தொகையை நிறுத்தியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்
தொகையை திரும்ப வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரீடு அமைப்பின் நிர்வாகிகள் மகேஸ்வரன், கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட முதியோர்கள் ஏராளமானோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: