தில்லி
நிகர்நிலைப் பல்கலக்கழகங்கள் தங்கள் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் என்னும் வார்த்தையை இனி நீக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய வாரியம் (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை தொடர்ந்து யுனிவர்சிடி கிரான்ட்ஸ் கமிஷன் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றரிக்கையை அனுப்பி உள்ளது.  இந்த சுற்றரிக்கை நாடெங்கும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கழகங்களுக்கு அனுப்பி உள்ளன.  அதில் தமிழ்நாட்டில் உள்ள 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அடங்கும்.
அந்த சுற்றரிக்கையில் , உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய பெயரில் பல்கலைக்கழகம் என்னும் வார்த்தையை உபயோகிக்க தடை விதித்தது.  யுஜிசி சட்டத்துக்கு எதிரான இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க யூஜிசியிடம் கேட்டுக் கொண்டது.  அதன்படி நாட்டில் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தங்களின் பெயரில் உள்ள “பல்கலைக்கழகம்”  என்னும் வார்த்தைய நீக்க வேண்டும்.   இதற்கு நிகரான வார்த்தைகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்பித்தால் அது குறித்து யுஜிசி தனது முடிவை அறிவிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: