திருப்பெரும்புதூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6வது வட்ட மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (நவ.12) நடைபெற்ற 6 வது மாநாட்டில் மாவட்ட குழு உறுப்பினர் டி.லிங்கநாதன் கொடி ஏற்றினார். வட்டக்குழு உறுப்பினர் எம்.எல்.ராஜா வரவேற்றார். ஆர்.சுகுமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசினார்.

வட்டக்குழு செயலாளர் பி.ரமேஷ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநாட்டில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, இ.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர். கே.முகமது கனி நன்றி கூறினார். 9பேர் கொண்ட வட்டக்குழுவுக்கு செயலாளராக பி.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜீவ்காந்தி நினைவிடம் அருகிலும், நீதிமன்றம் அருகிலும்  விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் மேம்பாலம் அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் அவசர விபத்துக்கு சிகிச்சையளிக்கும்  வகையில் சிறப்பு மருத்துவர்களையும்  போதுமான செவிலியர்களையும் நியமிக்க வேண்டும், குன்றத்தூர் மாதா கல்லூரி அருகேயும் செம்பரம்பாக்கம் -குன்றத்தூர் சாலையிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும்,  போந்தூர் பெரிய ஏரி மற்று ஓட்டை ஏரிகளைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக   தேரடியில் இருந்து மாநாட்டுத் திடல் வரை  வட்டக் குழு செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: