திருப்பூர் நவ. 13 –
திருப்பூர் மாநகரின் ஒருங்கிணைக்கப்பட்ட முந்தைய ஊராட்சிப் பகுதிகளில் சொத்து வரியைக் கடுமையாக உயர்த்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று சிபிஎம்திருப்பூர் வடக்கு ஒன்றியமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய 22 ஆவது மாநாடு ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருநாட்கள் போயம்பாளையம் பிரிவு தோழர் அ.பழனிச்சாமி நினைவரங்கத்தில் ( ரா.ர திருமண மண்டபம்) நடைபெற்றது. மாநாட்டு கொடியை நாச்சிமுத்து ஏற்றிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வாழ்த்திப் பேசினார். ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி அறிக்கையை முன்வைத்து பேசினார்.

இம்மாநாட்டில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை துவக்கிட வேண்டும். திருப்பூர் வடக்கு பகுதியில் அரசுகலைல்கல்லூரியும், பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளியும் அமைத்து தர வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனைக்கான இடத்தில் கட்டுமான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செயலாளர் – கமிட்டி தேர்வு
இம்மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக கே.பழனிசாமி மற்றும் 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: