இது மும்பை ஆஸாத் மைதானம். இவர்கள் மருந்து விற்பனை மேம்பாட்டு ஊழியர்கள்(Sales Promotion employees).20,000 பேர்.

பெரும்பாலும் முப்பையை தலைமையகமாக கொண்ட உலக மற்றும் உள்ளூர் பன்னாட்டு மருந்து கம்பெனிகளால் கடுமையான சுரண்டாலுக்கு ஆட்பட்ட உழைப்பாளிகள். தமது கோரிக்கைளுக்காகவும் மக்களின் கோரிக்கைக்காகவும் நாட்டின் நிதி மூலதனத்தின் தலைநகரான முப்பையில் இன்று போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

பேரணி நடத்த முப்பை போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. ஆகவே ஆஸாத் மைதானத்திலே போராட்டத்தை துவக்கி விட்டனர். இவர்களது பேரணியை துவக்கி வைக்க சென்ற தோழர். ஏ.கே.பத்மநாபன் இந்த மைதானத்திலேயே வாழ்த்தி பேசினார்.

இவர்களது பாடுகளை சுமந்து தேசம் முழுவதும் பரவிக்கிடக்கும் இவர்களை நமது அகில மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனம்(FMRAI) இந்த போராட்டங்களுக்கு தலைமை ஏற்றுள்ளது. இந்த சம்மேளனம் சிஐடியூ-வுடன் இணைக்கப்பட்டது.இன்றும் நாளையும் பல்வேறு மருந்து கம்பெனிகளின் தலைமையகங்கள் முன்பாகவே போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Courtesy
AK Padmanabhan

தோழர் கருமலையான் பதிவிலிருந்து…

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

%d bloggers like this: