தங்க சாலை பேருந்து நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் நவீன வசதிகளுடன் அமைத்துத்வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதி 14 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.

ஞாயிறன்று  (நவ. 12) வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற  மாநாட்டில்   53வது வட்டத்தில் போஜராஜன் நகரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கவேண்டும், பட்டா இன்றி தவிக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்,  ராமதாஸ் நகர், கல்லறைச்சாலை குடியிருப்புகளில் போதைப்பொருள் விற்கப்படுவதைத் தடுக்கவேண்டும், காட்பாடாவில் பராமரிப்பின்றி உள்ள பொதுக்கழிப்பிடத்தை புதுப்பித்துத்தரவேண்டும், தங்கசாலையிலிருந்து மூலகொத்தலம் வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல போடப்பட்ட தடுப்புகள் அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டி.வெங்கட் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மூத்தஉறுப்பினர் என்.ஆர்.தீனன் கொடி ஏற்றிவைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் துவக்கிவைத்துப் பேசினார்.  சி.முருகேசன் வரவேற்றார். ஏ.கே.ஷாஜகான் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.பகுதி செயலாளர் கே.செல்வானந்தன் வேலை அறிக்கையையும் எஸ்.பாப்பூ நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.ராணி, ஆர்.லொகநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
12 பேர் கொண்ட ராயபுரம் பகுதிக்குழுவிற்கு கே.செல்வானந்தம் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். நிறைவாக ஜி.தினேஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: