புதுதில்லி,

தேசிய நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய 500 கி.மீ தூரத்துக்கு உள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்றவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதையடுத்து தமிழகத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு மூடப்பட்ட கடைகளைத் திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், தேசிய நெடுஞ்சாலைகள் எனும் பெயரை ஊரக சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்யும் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும், டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி அளித்தனர். இதுதொடர்பான எழுத்துபூர்வமான உத்தரவு பின்னர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave A Reply