சேலம், நவ.13-
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து ஞாயிறன்று தாரமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தாரை கோகுல்கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் பி.சஞ்சீவி, ஒன்றியப் பொருளாளர் டிஜி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியை சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு துவக்கி வைத்தார். இந்த பிரச்சார இயக்கத்தில் 100க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று வழியெங்கும் சேலம் உருக்காலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.முன்னதாக, இப்பிரச்சார இயக்கத்தை வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், சேலம் வடக்கு மாநகர தலைவர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் சசிக்குமார், மாதர்சங்க மாவட்டத் தலைவர் டி.பரமேஷ் வரி, ஒன்றியச் செயலாளர் ஆர்.சாந்தி, திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.தங்கராஜ், இளைஞரணி துணைச் செயலாளர் எம்.ஆர்.சரவணன், பேரூர்கழகச் செயலாளர் டிஎம்எஸ்.குணசேகரன், உருக்காலை சிஐடியு துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில்வாலிபர் சங்க ஒன்றிய துணைச்செயலாளர் ஆர்.லோகநாதன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: