தில்லி,

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரிய வழக்கில் 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரியும், ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரியும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: