சென்னை,

கர்நாடக அதிமுக அம்மா அணியின் மாநில செயலாளர் புகழேந்தி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

பெங்களூரில் உள்ள கர்நாடக அதிமுக அம்மா அணியின் மாநில செயலாளர் புகழேந்தியின் வீட்டில் கடந்த 9 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க புகழேந்திக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜரானார்.

Leave A Reply