புதுதில்லி;
பாட்மிண்டன் போட்டிகளில் உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு 13 சூப்பர் சீரியஸ் ஓபன் தொடர்கள் நடத்தப்படுகின்றன.இந்த வருடத்தின் 11-வது தொடரான சீன ஓபன் நாளை துவங்குகிறது.நாளை துவங்கி 19ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காயத்தால் விலகியுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்த ஆண்டில் நடந்துள்ள சூப்பர் சீரியர்ஸ் பாட்மின்டன் போட்டிகளில், இந்தோனேசியன் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், டென்மார்க் ஓபன் மற்றும் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.ஒரே ஆண்டில் நான்கு பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ஸ்ரீகாந்த் உலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார்.

கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது அபார ஆட்டத்தால் தொடர்ந்து பாட்மிண்டன் உலகை மிரட்டி வருவதால் சீன ஓபன் போட்டி தொடரை வெல்வார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் சீன ஓபன் தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளார்.ஸ்ரீகாந்த், சீன ஓபன் போட்டியில் பட்டம் வென்றால், முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் காயம் காரணமாக வாய்ப்பு பறிபோயுள்ளது. சீன ஓபனில் இந்தியா சார்பில் பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: