சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஆதரவு அமைப்பான திவாஸ் சென்னையில் உலக நீரிழிவு தினத்தையொட்டி நவம்பர் 14 அன்று ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இவ்வருடம் அகில உலக நீரிழிவு அமைப்பு “மகளிரும் நீரிழிவும்” என்ற பொருளில் நடத்தப்பட உள்ளது

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  திவாஸ் அமைப்பின் நிறுவனர் உஷா  சிறீராம், நீரிழிவு நோய் தடுப்பு முறைகள் பற்றியும் பெண்கள் மற்றும் சிறுமியருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஜக்ஷநகசநந  சமுக வலைத்தளம் ஒன்றை நாங்கள் துவங்க இருக்கிறோம். இது நீரிழிவு நோயின் தாக்கம், தடுப்பது எப்படி, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் மனநல பாதிப்பு போன்ற சுகாதார வழிமுறைகள் மற்றும் விவரங்களை விளக்கும் வகையில் இந்த வலைத்தளம் அமைந்திருக்கும்.  நாங்கள் இந்தியாவின் 100 நகரங்களில் இந்த நிகழ்ச்சியை எங்களது வல்லுநர் குழுவின் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மகளிர் மேம்பாடு மற்றும் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் விதமாக  நீரிழிவு நோய் பற்றிய உண்மைகள், தவறான எண்ணங்கள், புள்ளி விவரங்கள், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றியும், நீரிழிவு நோய் தடுப்பு முறைகள் பற்றியும் பெண்களிடமும் சிறுமியரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். ஏனென்றால் இவர்களை நீரிழிவு நோய் எளிதாக  தாக்க வல்லது. இதனால் அவர்கள் இருதய நோய், பக்க வாதம், கண் பார்வை குறைபாடுகள், கருதரிப்பின் போதும் மனச்சோர்வு மற்றும் வறுமை போன்றவற்றாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஜெயசிறீ கஜராஜ்,  விஜயா மருத்துவமனை டாக்டர் பூமா சீனிவாசன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் சாந்தி  குணசிங் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: