கூடலூர், நவ.13-
கூடலூரில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சிபிஎம் கூடலூர் ஏரியா கமிட்டி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூடலூர் ஏரியா கமிட்டி 10வது மாநாடு பிதர்காட்டில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, வி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தீர்மானங்கள்:
இம்மாநாட்டில், அனைத்து பொருட்களும் ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும். கூடலூரில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி அமைத்திட வேண்டும். நீலகிரி மாவட்டத்திலுள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநாட்டில் கூடலூர் ஏரியா கமிட்டி செயலாளராக எம்.ஏ.குஞ்சுமுகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, சனியன்று பிதர்காட்டில் மாநாட்டையொட்டி பேரணி மற்றும் பொதுகூட்டம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: