நாகர்கோவில்;
குமரிமாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக மலையோரபகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மலையோரபகுதியில் சாரல் மழை நீடித்ததால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.தொடர் மழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 273 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 156 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 61 அடியாக உள்ளது. அணைக்கு 379 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 260 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணைக்கு 21 கன அடி தண்ணீரும், சிற்றாறு 2 அணைக்கு 27 அடி தண்ணீரும் , மாம்பழத்துறையாறு அணைக்கு 4 அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் மழை அளவு விவரம் வருமாறு (மி.மீ) பெருஞ்சாணி – 3.4, சிற்றாறு 2 – 8.2, புத்தன் அணை – 4.மழை காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: