கோவை, நவ.13-
கோவை, வெறைட்டிஹால் மட்டசாலை பகுதியில் வசித்து வருபவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை, வெறைட்டிஹால், மட்டச்சாலை பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ளவர்களை அங்கிருந்து அகற்றி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளில் அமர்த்தப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி தற்போது அக்குடியிருப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால், 200க்கும் மேற்பட்டகுடும்பங்களுக்கு தற்போது வரை குடிசைமாற்று வாரியத்தின் குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படவில்லை.

இதனால் தாங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதால் உடனடியாக வீடு ஒதுக்கிதர வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: