அகமதாபாத்
அகமதாபாத் மணிநகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற நிர்மலா சீதாராமனுக்கு பாஜக உறுப்பினரே கறுப்புக் கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க பாஜக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி உள்ளனர்.  இதைத்தொடர்ந்து அகமதாபாத் மணி நகர் தொகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்க சென்றார். மணிநகர் தொகுதியை சேர்ந்த அமரவாடி மற்றும் கோக்ரா பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.   மோடி பிரதமராவதற்கு முன்பு மணிநகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
வாக்கு சேகரிக்க வந்த நிர்மலாவுக்கு பா ஜ க தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   மகேஷ் பட்டேல் என்னும் மத்திய வயது இளைஞர் ஒரு வர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.  “நான் ஒரு படேல் இனத்தவன்.   பா ஜ கவில் 20 வருடங்களாக இருந்து வருகிறேன்.   பா ஜ க வினர் பொதுமக்களின் பணத்தை வெகுவாக கொள்ளை அடித்து வருகின்றனர்.   இந்த தொகுதிகளின்  சாலைகளை பழைய மற்றும் தரமற்ற கற்களால் உருவாக்கி உள்ளனர்.  இது பற்றி நான் அளித்த புகார்களை எந்த ஒரு பா ஜ க தலைவரும் கண்டுக் கொள்ளவில்லை” என கூச்சலிட்டார்.   இது அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: