நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராவோம் என்றும், 2018 ஜனவரியில் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு சிறைகளை நிரப்பிடத் தயாராவோம் என்றும் “மகா முற்றுகை”ப் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங் கள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ், டெலி காம், பாதுகாப்புத்துறை சங்கங்கள் விடுத்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நவம்பர் 9 – 11 தேதிகளில் பங்கேற்ற “மகாமுற்றுகை”ப் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றது. எனினும் மத்திய பாஜக அரசாங்கம்தன் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளைக் கிஞ்சிற்றும் கைவிடுவதுபோல் தோன்றவில்லை.எனவே, தங்களுடைய 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகுமாறும், மத்திய பட்ஜெட் டின்போது சிறைகளை நிரப்பவும் தயாராகு மாறும் மத்தியதொழிற்சங்கங்கள் அறைகூவல்விடுத்துள்ளன.ஜனவரியில்…இதற்கு முன்னதாக ஜனவரி இறுதி வாரத்தில் மாவட்ட அளவில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், மாநில அளவில் ஒரு பொதுவான தேதியை மாநிலத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனியார்மயத்திற்கு எதிராக துறைவாரியாக கூட்டுவேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்திடவேண்டும் என்றும் மத்திய தொழிற்சங்கங் கள் அறைகூவல்விடுத்துள்ளன.

கடந்த மூன்று நாட்களில் நாடு முழுதுமிருந்து பல லட்சக்கணக்கான தொழி லாளர்கள் “மகாமுற்றுகைப்” போராட்டத்தில் பங்கேற்ற போதிலும், எவ்விதமான அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய தொழிலாளர்களுக்கும், குறிப்பாக லட்சக்கணக்கில் பங்கேற்ற பெண் ஊழியர்களுக்கும் மத்தியத் தொழிற்சங்கங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தன.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபின்னர், மத்திய தொழிற்சங்கங்கள் மீண்டும் கூடி, எதிர்கால நடவடிக்கையைத் திட்டமிட இருக்கின்றன. (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: