பாக்தாத்,

ஈரான் ஈராக்கில் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இது ஈரான் – ஈராக் எல்லை பகுதியாகும் இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கம் மத்தியதரைக்கடலோரப் பகுதி வரை மேற்கு நோக்கி இருந்தது. ஈரான் மேற்கு ஹெர்மன்ஷா மாகாணத்தில் மிக மோசமான சேதம் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் அதிகம் நில நடுக்கும் ஏற்படும் மண்டலத்தில் உள்ளது. இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் 6.6  ரிக்டர் அளவு ஏற்பட்ட  நில நடுக்கத்தில்  பாட் நகரில் 26 ஆயிரம் பேர் பலியானார்கள்.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 335  பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply