தெஹ்ரான்,

ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 168 பேர் பலியாகினர்.

ஈரான் – ஈராக் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் ஞாயிறன்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கமானது ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ., தொலைவில் , ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன.  மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.