சென்னை;
இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகிபி.சுசீலாவுக்கு இன்று 82-வது பிறந்தநாள். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் தனது மெல்லிசை பாடல்களால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர்.25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் பிறந்தார்.ஆரம்ப காலத்தில் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் “பெற்றதாய்” படத்தில் முதன் முதலில் பின்னணி பாடகியாக பாட வைத்தார்.அதன் பின் சீரான இடைவெளிக்கு பின்பு பின்னணி பாடல் வாய்ப்புகள் குவியத் துவங்கின.

1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பலதரப்பிலும் பாராட்டுகள் குவியத்தொடங்கின. ஐந்து முறை தேசிய விருதுகள்;
1.கம்பன் புகழ் விருது, 2016 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை
1.இந்திய அரசின் பத்ம பூஷன் விருது – ஜனவரி 2008.
3.தேசிய அளவில் மிகச்சிறந்த பின்னணிப் பாடகி விருது ஐந்து முறை.
4.ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது (2001)
5.கலைமாமணி விருது.                                                                                                                                    6.கின்னஸ் சாதனை 2016  (சோக மற்றும் மெல்லிசை பாடல்களுக்காக கடந்த கின்னஸ் சாதனைக்கு தேர்வு செய்யப்பட்டார்) கருநாடக இசையில் கலக்கும் சுசீலா பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான சிறப்பு அந்தஸ்தை பெற்றார். இந்தியாவில் பல மொழிகளில் பாடினாலும் தமிழ் மொழியில் பாடிய பாடல்கள் தான் அனைத்தும் மெகா ஹிட் அடித்தன.இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த “சிலநேரங்களில்” என்ற திரைப்படத்தில் “பொட்டு வைத்த” என்ற பாடலைப் பாடினார்.வயது முதிர்ந்த காரணத்தினால் தனது மகன் ஜெய் கிருஷ்ணா உடன்வெளிநாட்டில் உள்ளார்.

Leave A Reply