சூழலுக்குத் தகுந்தாற்போல் கட்டிடங்களை அமைக்க வேண்டிய தேவை உள்ளதாக எவரெஸ்ட் ஸ்டீல் பில்டிங் தொழில்பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி மணிஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
சென்னையில்  கட்டிட தொழில்நுட்பக் கையேட்டை  வெளியிட்டார். அதனை எவரெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிஷ் சங்கி பெற்றுக்கொண்டார்.

பின்னர் இந்தியாவின் ஸ்டீல் துறை வளர்ச்சி குறித்து பேசுகையில், கடந்த 4 மாதங்களாக இறக்கமாக இருந்த ஸ்டீல் விலை தற்போது ஓரளவு சீரடைந்துள்ளது. அடுத்த ஆண்டும் இதே நிலையே நீடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

கட்டிடங்களைப் பொறுத்தவரை சூழலுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அதே நேரத்தில் மிக வேகமாகவும் கட்டி முடிக்க வேண்டும். இந்த இரண்டையும் ஸ்டீல் பில்டிங் முறை பூர்த்தி செய்கிறது. வெறுமனே தொழில் நிறுவன கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மெட்ரோ நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றிலும் இந்த ஸ்டீல் பில்டிங் முறையைக் கடைப்பிடித்து வருகிறோம். ஒப்பீட்டளவில் கான்கிரீட் கட்டிடங்களை விட இந்த ஸ்டீல் பில்டிங் கட்டிடங்கள் மிகவும் பாதுகாப்பானது என்றார் அவர்.

Leave A Reply

%d bloggers like this: