திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்று காலை 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. செருதோனி, மூலமட்டம், குலமாவு ஆகிய இடங்களில், ஏழு வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது . குலமாவு பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply