ஐதராபாத்,
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பெர்ரி கிராமத்தில் கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி ஞாயிறன்று மாலை சிலர் கிருஷ்ணா ஆற்றில் படகு பயணம் சென்றனர். 38 பேர் ஒரு தனியார் நிறுவனத்தின் படகை வாடகைக்கு அமர்த்தி கிருஷ்ணா ஆற்றில் பிரகாசம் தடுப்பணைக்கு மேல் புறம் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

கிருஷ்ணா ஆற்றில் பவித்ரா சங்கமம் என்ற இடம் நோக்கி அவர்கள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரத விதமாக திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதைப்பார்த்த அருகில் கரையில் இருந்த மீனவர்கள் சிலர் ஆற்றில் குதித்து 15 பேரை மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து படகை ஓட்டியவர் கூறும்போது, “பவித்ரா சங்கமத்தை பார்க்கும் ஆவலில் படகில் இருந்த அனைவரும் ஒரே பகுதி நோக்கி சென்றனர். இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் படகு கவிழ்ந்துவிட்டது” என்றார்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: