இந்தியாவில் 18 நிமிடங்களுக்கு ஒருசாதிய ஒடுக்குமுறை நிகழ்கிறது. தினமும்3 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குஉள்ளாகிறார்கள். 2 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், 2 வீடுகள் தாக்கப்படுகின்றன.

இத்தாக்குதல்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம். மராட்டிய மாநிலம் கல்யாணில் 2தலித் குழந்தைகளை கட்டி வைத்து தாக்கினார்கள்.

குஜராத் மாநிலம் உனாவில் தலித் இளைஞர்களை செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக தாக்கினார்கள்.

ராஜஸ்தானில் தலித் பெண்ணை மந்திரவாதி எனக்கூறி தாக்கினார்கள்.

காந்தி நகரில் மீசை வைத்ததற்காக தலித் இளைஞர் தாக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு பொது இடத்தில் பயிர் வைத்து சாகுபடியில் ஈடுபட்டதாக தலித் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

அகமதாபாத் நீதிமன்றத்தில் பணியாற்றிய தலித் ஊழியர் தலித் அல்லாத சிலரால் அவமானப்பட்டதால் தற்கொலை செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் வானஸ்பதியில் தலித் கர்ப்பிணிப்பெண் தாக்கப்பட்டார்.

குஜராத்தில் பாஜக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் 163 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின்படி 2012 இல் நாடு முழுவதும் இதுபோன்ற 33ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அது 2015இல் 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டுக்கான விவரம்வெளியிடப்படவில்லை. அதில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும். அதனால்தான் வெளியிடப்படவில்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது.

பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளில்34 சதவீதம் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது தலித்துகள் மீதான தாக்குதல் வழக்குகளில் 23 சதவீதம் மட்டுமே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

காஞ்சா அய்லய்யா, பெருமாள் முருகன்போன்ற எழுத்தாளர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை ஏவப்படுகின்றன. ஹைதராபாத்தில் ரோகித்வெமுலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் அவரது உயிரைப் பறித்தார்கள். தற்கொலை செய்த பிறகும் அவர் தலித் அல்ல என்று நிறுவும் முயற்சியும் நடந்தது.

பனாரஸ் இந்து கல்லூரியில் வாலிமீகி என்கிறமாணவர் கல்வி கட்டணத்துக்கு பணம்இல்லாமல்தனது சிறுநீரகத்தை விற்க முனைந்தார்.

தலித் என்பதால் அவரது சிறுநீரகத்தை பெறஎவரும் முன்வரவில்லை. தலித் மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளனர். தலித் மக்கள் எழுத்தறிவும், வேலையும் பெறுவது மிகவும் அவசியம். ர 15 க்கும் 51க்கும் இடைப்பட்ட வயதினரில் 18 சதவீதம் தலித்துகளுக்கு வேலை இல்லை.66 சதவீதம் தலித்துகளுக்கு படிப்பறிவு கிடைக்கவில்லை. இது அரசின் புள்ளிவிவரம். உண்மையில் இதை விட அதிகம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தாய்-சேய் உயிரிழப்பு தலித் பகுதியில் அதிகரித்து வருகிறது. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்பு ஆயிரத்துக்கு 83. ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகளின் இறப்பு ஆயிரத்துக்கு 119 ஆக உள்ளது. ர தலித் மக்களின் வாழ்நாளும் குறைந்துள்ளது. நாட்டின் 65 சதவீதம் தலித் மக்களுக்கு கழிப்பறை இல்லை.

46 சதவீதம் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.

35 சதவீதம் தலித் மக்களுக்கு மட்டுமே குடிநீர்கிடைக்கிறது. பொருளாதார சமத்துவம் அளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், ஆண்டு தோறும்தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் பின்னோக்கி செல்கிறது. குறிப்பாக 1991க்கு பிறகு நவீனதாராளமயத்தால் இந்த நிலை தீவிரமடைந்துள்ளது.

37 சதவீதம் தலித்துகள் பட்டினியில் வாழ்கிறார்கள்.

ஊட்டச்சத்து இல்லாதோர் 54 சதவீதத்தினர். 80 சதவீதம் தலித்துகளுக்கு நிலம் இல்லை. 2001இல் 20 சதவீதம் பேரிடம் நிலம் இருந்தது. 2011இல் இது 15 சதவீதமாக குறைந்துள்ளது. அப்படியென்றால் அவர்களிடம் இருந்து நிலங்கள் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன என்று பொருள்.

(மதுரை தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதிலிருந்து.)

Leave A Reply

%d bloggers like this: