கரூர்:

கரூரில் அமைச்சருக்கு பாதுகாப்பாய் சென்ற காவலர்களின் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்றுள்ளனர். இதில் அமைச்சருக்கு பாதுகாப்பாக காவலர்கள் வாகனமும் பின்னால் சென்றுகொண்டிருந்தது. இவர்களது வாகனம் குறிகாரன்வலசு என்ற கிராமத்தின் அருகே வந்த போது, இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக பாதுகாப்பு காவலர்களின் வாகனம் மோதியது. இந்த விபத்தில் லட்சுமணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: